Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு முரண்பட்டதே இல்லை: ரவூப் ஹக்கீம்

கிழக்கில் முதலமைச்சர் பதவியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்திற்கு சேதம் இல்லாத விட்டுக் கொடுப்பினை செய்துள்ளது. அத்துடன் திவிநெகும சட்டமூலத்திற்கு தெரிவித்த ஆதரவானது, சேதம் இல்லாத விட்டுக்கொடுப்பல்ல. எமது கட்சி அதனை பக்குவமாகவும், நேர்மையாகவும்
கையான்றுள்ளது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை அடுத்த கட்டமாக ஜனாதிபதி எமக்கு வழங்குவார். இது எமக்கு சேதம் இல்லை.

அதேபோல் எந்த நோக்கத்திற்காக திவிநெகும சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது என்பது பற்றி மாகாணசபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளேன். இதுபற்றி மாகாணசபை உறுப்பினர்களின் பார்வை வித்தியாசமாக இருந்தாலும், அணியின் ஒற்றுமை அவசியமாகும்.

கிழக்கு மாகாண சபை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூரநோக்கோடும், எந்தச் சுயநல நோக்குமில்லாமல் மக்களின் நலனுக்காக தெளிவான முடிவுகளை எடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்காமையினை அடுத்து, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எமது கட்சிபற்றியும் அதன் தலைமையை பற்றியும் ஒவ்வொரு நாளும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு போதும் முரண்பட்டது கிடையாது. அவர்களை விமர்சித்ததும் கிடையாது.

முஸ்லிம் காங்கிரஸை விரும்பிய திசைக்கு கொண்டு போகலாம் என சில சக்திகள் நினைக்கின்றனர். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லையென்றால் கட்சியை பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனர். இன்று எமது அரசியல் பலத்தினை பாதுகாப்பது பாரிய சவாலாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment