Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, October 27, 2012

மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு இப்புனிதத் திருநாளில் திட சங்கற்பம் பூணுவோம் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல்
வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித
்திருப்பதாவது;

உலகின் எட்டுத் திசைகளில் இருந்தும் பல லட்சம் முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்றுகூடி நிறைவேற்றுகின்ற ஹஜ் கடமையானது நமக்கு பல்வேறு படிப்பினைகளைப் போதிக்கின்றது.

தியாகம், சகிப்புத் தன்மை, சமத்துவம், ஒற்றுமை போன்ற சிறப்பம்சங்கள் அவற்றுள் மிக முக்கியமானவையாகும்.

இந்த சிறப்பம்சங்களும் நற்குணங்களும் நமது அன்றாட வாழ்வில் நிலைத்து நிற்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய பண்புகளை ஒவ்வொரு தனி மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும்போது சமூக கட்டமைப்பிலும் நாட்டிலும் முழு உலகத்திலும் வீண் பிணக்குகள் ஏற்பட ஒருபோதும் வாய்ப்பிருக்காது.

நமது இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் இத்தகைய பண்புகளை முஸ்லிம்கள் கடைப்பிடித்து பிற மதத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வதன் மூலம் அன்னியரின் நெருக்குவாரங்களில் இருந்து நாம் விடுபடவும் அவர்களது சூழ்ச்சிகளை முறியடிக்கவும் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கவும் இஸ்லாம் எழுச்சி பெறவும் வாய்ப்பேற்படும்.

எனவே இன்றைய ஈகைத் திரு நாளில் முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய உயர் பண்புகளைப் பேணி, தமக்குள்ள ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி, ஒரு பக்குவப்பட்ட சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம். ஈத்முபாரக்.

No comments:

Post a Comment