நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் இந்த நேரத்தில் எமது நாட்டில் கடந்த 22 வருட காலமாக அகதி முகாமில் அவல நிலையில் வாழும் வடமாகாண சகோதர முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்கு முன்வருமாறும், அம்மக்களின் மீள்குடியேற்றம் வெற்றியளிப்பதற்கும் பிரார்த்தனைகளை புரியுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தமது ஹஜ் பெ
ருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளதாவது –
இஸ்லாத்தின் ஜம்பெருங் கடமைகளுள் ஹஜ் மிகவும் முக்கியமானதொன்று. வசதி படைத்தவர்களுக்கு இது முதன்மையானதாகும். அந்த வகையில் புனித ஹஜ் கடமையினையினை நிறைவேற்ற சென்றுள்ள ஹாஜிகளின் ஹஜ்ஜினை இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிராத்த்திப்பது தான் பொருத்தமாகும்.
அதே போன்று இலங்கையிலும் சர்வதேசத்திலும் அல்லலுரும் முஸ்லிம்களுக்கு அந்த கஷ்டத்திலும், சோதனையிலும் இருந்து விடுபட எமது துஆக்களும் முக்கிமானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் தெரிவித்துள்ளார்.
சமாதானம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் கொண்டாடும் தியாகத் திருநாள் முன்மாதிரி மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் பற்றுருதியுடன் செயற்படுமாறும் ஹஜ் புகட்டும் பாடத்தை தமது வாழ்வில் ஏற்று நடக்குமாறும் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹூனைஸ் பாருக் எம்.பி.கேட்டுள்ளார்

No comments:
Post a Comment