Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, October 22, 2012

பாடசாலையின் அபிவிருத்தியில் அரசை மாத்திரம் நம்பியிருக்ககூடாது – ரவூப் ஹக்கீம்

ஒரு பாடசாலையின் அபிவிருத்தியில் அரசை மட்டும் நம்பி இருக்காது பெற்றோர், பழைய மாணவர்;, ஆசிரியர் முதலானோர்hகளும் முக்கிய பங்கை வகிக்க வேண்டி இருப்பதாக நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.


அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பாடசாலைத் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேல
ும் உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம்; தெரிவித்ததாவது,,

இன்று எமது அனேக பாடசாலைகள் குறைபாடுகள் பலவற்றுடன் இயங்கு கின்றன. அவ்வாறான சில குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்த போதும் மேலும் சிலவற்றை பாடசாலைச் சமூகம் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர்கள் அசிரியர்கள் பழைய மாணவர்கள் போன்ற பலரது கடமையாக இது உள்ளது.

அவற்றை இனம் கண்டு அவர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். 100 பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரு பாடசாலையை நடாத்துவது என்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் பாரிய சவாலாக உள்ளது. அப்படியாயின் ஆயிரக்கணக்கான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களது பிரச்சினையையும் சேர்த்து அரசு தீர்க்கவேண்டியுள்ளது என்றும் கூறினார்.

சுவிட்ச்சர்லாந்து நிறுவனம் ஒன்று மேற்படி தளபாடத் தொகுதியை பாடசாலைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வைபவத்தை அடுத்து அமைச்சர் அக்குறணை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்து அதன் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

No comments:

Post a Comment