துபாயில் இன்று ஆரம்பமாகும் உலக சக்தி வள மாநாட்டில் பங்குகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுமாலை பயணமானார்.அரச தலைவர்கள் 21 பேரின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சகல
நாடுகளையும் சார்ந்த 2000ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.
உலகின் நிலையான அபிவிருத்திக்காக சுற்றாடலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பான சக்திவளத்தை பயன்படுத்துதல் என்ற நோக்கில் 2008ஆம் ஆண்டில் உலக சக்தி வள ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.
உலக சக்திவள நெருக்கடிக்குத் தீர்வைத்தேடுதல், சக்திவள தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எதிர்கால சக்திவளப் பாதுகாப்புக்காக சேதன சக்திவளத்தைப் மேம்படுத்துதல் போன்ற காரணங்களை இந்த ஒன்றியம் நோக்காகக் கொண்டுள்ளது.

No comments:
Post a Comment