முஸ்லிம்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தினால் ஏற்படவிருந்த பாதிப்புகளை தடுத்து நிறுத்தியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.
இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திற்கு சற்று நேரத்திற்கு முன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,,
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டது. வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு அச்சட்டம் பாதகங்களை கொண்டிருந்தது. எனவே இதுதொடர்பில் நாம் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம்.
எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் என்ற வகையில் நானும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.
70 & தொகுதி முறைமையும் 30 & விகிதாசார முறைமையும் கலந்த புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க உத்தேச சட்டம் வழிவகுத்திருந்தது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் இதனை எதிர்த்தது. தொகுதி முறையில் 60 & முறையையும், 40 & விகிதாசார முறையையும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. கட்சிப் பிரதிநிதிகளும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை ஏனைய கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. குறித்த சட்டமூலம் மீண்டும் சபையில் வாசிப்புக்கு உட்படுத்தப்படும் போது முஸ்லிம் காங்கிரஸின் சிபார்சுகள் உள்ளீர்ப்புச் செய்யபடும். முஸ்லிம் சமூகுத்திற்கு ஏற்படவிருந்த பாதிப்பை தடுத்து நிறுத்த உதவியது தமது கட்சின் பேரம் பேசும் சக்தியே எனவும் இதன்போது ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment