Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் விடுதலை

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் முஹம்மத் நஷீத் மாலியிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் செவ்வாய்க்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டார்.

“அவர் இப்பொழுது சுதந்திர மனிதர். இன்று அவர் எங்களுடன் பிரச்சாரத்திற்காக தென்னக தீவுகளில் ஒன்றிணைகிறார்” என்று மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஹமீத் அப்துல் கஃபூர் தெரிவித்துல்ளார்.

அவர் எதற்கு கைது செய்யப்பட்டார் என்பதற்கு தெளிவான காரணம் தெரியவில்லை. மாலத்தீவிலுள்ள பெரிய தீவான ஹுல்ஹுமாலி என்ற தீவிலுள்ள மாஜிஸ்திரேட்டு இவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்திருந்தார்.

No comments:

Post a Comment