மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சீருடையில் மோட்டார் சைக்கிள் செலுத்தும் போது தலை கவசம் அணிவது அவசியமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் தலை கவசம் அணியாது செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள், மரணங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வனை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெளிவுபடுத்தும் கூட்டமொன்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி கிங்ஸிலி குணசேகர உள்ளிட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment