(என். சப்னாஸ்)
முதியோர் தின விழாவினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றசான் அவர்களின் தலைமையில்; நடைபெற்ற மூத்த பிரஜைகளுக்கான மாதாந்த பொதுசன கொடுப்பனவுக்கான புத்தகங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச செயலகம்,
மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேற்படி இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா ஏ. சகி ,மற்றும் மாநகர சபை உறுப்பினர் என்.எம். நஜிமுத்தீன் ஆகியோர் பிரஜைகளுக்கு புத்தகம் வழங்குவதையும் அருகில் முக்கிய பிரமுகவர்களையும் படங்களில் காணலாம்
.
No comments:
Post a Comment