Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 26, 2012

சபையில் கூச்சல்: சர்ச்சைக்கு மத்தியிலேயே அமைச்சர் ஹக்கீம் பதிலுரை

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாத நேரத்தில் சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை காட்டி ஒழுங்கு பிரச்சினையொன்றை கிளப்பிய ஐ.தே.க.
எம்.பி. அஜித் பி. பெசைராவுக்கு அனுமதி வழங்கப்படாமையால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இதற்கு மத்தியில் நீதித்துறை எதிர்நோக்கும் பிரச்
சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு பதிலளித்துக் கொண்டிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியிலேயே பதிலளித்துக் கொண்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுரகுமார திசாநாயக்கவினால் நீதித்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிசைரணை மீதான இருதரப்பு விவாதங்களின் இறுதியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளித்தார். இதன்போது அவர் பதிலளிப்பதற்கு 10 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுமார் நான்கு நிமிடங்கள் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் சபைக்குள் நுழைந்த அஜித் பி பெசைரா எம்.பி. தனது கையில் வைத்திருந்த ஆவணமொன்றை சபைக்கு தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் காட்டியவாறு ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி நின்றார். இதன் போது ஐ.தே. கட்சியின் மற்றுமொரு எம்.பி.யான சுஜீவ சேனசிங்க மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்கவும் அஜித் பி. பெசைரா எம்.பி.யுடன் இணைந்துகொண்டு ஒசை குரலாக ஒழுங்கு பிரச்சினையை கிளப்பினர்.

இதன்போது ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட அமைச்சர்கள், உறுப்பினர்கள் என சகலரும் ஒழுங்கு பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேரம் போதாமையால் அமைச்சருக்கு பதிலளிக்க இடமளிக்குமாறும் பிரதி சபாநாயகரை கேட்டுக் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, அஜித் பி. பெசைரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை கோரிக்கையை நிராகரித்ததுடன் அதற்கு சந்தர்ப்பம் வழங்குவதிலிருந்தும் விலகியிருந்தார்.

இதனையடுத்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் கூச்சல், குழப்பமும் உண்டானது. இவ்வாறு இருதரப்பு கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியிலேயே அமைச்சர் ஹக்கீம் ஒத்திவைப்பு வேளை பிசைரணைக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். சரியாக 7 மணிக்கு சபை அமர்வுகள் நிறைவுக்கு வந்தபோதிலும் அதனைத் தொடர்ந்தும் அஜித் பி பெசைரா எம்.பி. ஆளும் கட்சி எம்.பி. க்களுடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் தான் வைத்திருந்த ஆவணத்தை ஊடகங்களுக்கு வழங்குவதாகவும் உரத்தக் குரலில் கூறியதை அவதானிக்க முடிந்தது.

No comments:

Post a Comment