Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 26, 2012

சர்வதேசப் பிறை அடிப்படையில் காத்தான்குடியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

சர்வதேசப் பிறை அடிப்படையில் உலகளாவிய ரீதியில் தியாகத் திருநாள் ஈதுல் அல்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம்கள் இன்று உலகின் நாலா பாகங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.


இதற்கமைவாக இலங்கையிலும் கொழும்பு புத்தளம் ஹபுகஸ்தலாவ, அக்கரைப்பற்று, காத்தான்குடி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டா
டுகின்றனர்.

இதற்கமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று காலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நடைபெற்றது. தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் மௌலவி அஸ்ஸெய்க் அஸ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்.

இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் ஆண் பெண் அடங்கலாக பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டதாக தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் ரஊப் தெரிவித்தார்.

1 comment:

  1. //சர்வதேசப்(base on Makkah) பிறை அடிப்படையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் இன்று கொண்டாடப்பட்டது// ஏன் பெருநாள் மட்டும் Makkah base தொழுகை நேரத்தையும் Makkah base ஆக கடைப்பிடிக்கலாமே, இங்கு Fajr 5.05am இலங்கை நேரப்படி 2.35am முடியுமா?

    ReplyDelete