க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு புள்ளியிடுவதை பரீட்சை திணைக்களம் உடனடியாக நிறுத்த வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் பரீட்சை திணைக்களத்திடம் வலியுறுத்தி உள்ளன.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலை நிறுத்தத்தை கைவிடும் மேற்கொண்டு தமது வேலை
நிறுத்தத்தை கைவிடும் வரை மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாமென அவை வலியுறுத்துகின்றன.
இளைப்பாறிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் புள்ளியிடுதலை மேற்பார்வை செய்ய பொருத்தமில்லாதவர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.
உயர்தர விடைத்தாள் புள்ளியிடும் வேலையை தொடர வேண்டாமெனக் கேட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் எழுதியிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்;;டாலின் கூறினார்.
சரியான தரங்களுக்கு அமையாத வகையில் புள்ளியிடும் வேலைகள் நடப்பதாக அவர் கூறினார்.
புள்ளியிடும் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ள கொழும்பு கோதமி வித்தியாலயத்தின் 6ஆம் 7ஆம் தர மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புள்ளியிடும் வேலை நடைபெறும் பாடசாலைகளை முழுமையாக மூடிவிடுவதே வழக்கம். இது குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என ஸ்ராலின் கூறினார்.
பெறுபேறுகள் தவறாக காணப்படுமாயின் கல்வியமைச்சு பொறுப்பேற்கப்போவதில்லை என அவர் கூறினார்.
இந்த விதமாக புள்ளியிடல் நடந்தால் மேலும் குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகும் என இலங்கை ஆசிரியர் சேவைச்சங்க செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.
நன்றி தமிழ்மிரர்

.jpg)
No comments:
Post a Comment