அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6 வயது சிறுவனொருவனின் வயிற்றுக்குள் காணப்பட்ட 90 புழுக்களும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
வயிற்றுவலியால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவனின் வயிற்றை சோதித்தபோது வயிற்றின் பெருங்குடலில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிப்பட்டது. இதனையடுத்து உடனடியாக இச்சிறுவனை சத்திரசிகிச்சைக்குட்படுத்தி வயிற்றுக்குள் காணப்பட்ட புழுக்களை வெளியில் எடுத்து சிறுவனின் உயிரை வைத்திய நிபுணர் ஜெமில் அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றியுள்ளார்.
இப்புழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி இரண்டு சென்ரிமீற்றர் நீளமுடையதெனத் தெரிவித்த வைத்தியர், தக்கநேரத்தில் சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துவந்ததால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இச்சிறுவன் பல வருடங்களாக பூச்சிகளை அகற்றுவதற்கான மருந்துகளை பாவிக்காத நிலையில் இப்புழுக்கள் வயிற்றில் விளைந்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்

No comments:
Post a Comment