சர்வதேச வர்த்தக மயமாக்கலில் உ லகில் முன்னணி இடத்தில் இருப்பதும் மற்றும் உலகின் நான்காவது எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும் விளங்கும் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது.
இலங்கையில் நிலவும் அமைதி பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் ஸ்தீரன நிலை என்பன இலங்கையின் பால் ஐக்கிய அரபு இராச்சிய தனியார் முதலீட்டாளர்களின்

கவனத்தைத் திருப்பியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் எச்.ஈ.அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் கே. ஆல் முல்லா தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம் பெற்ற தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுடனான உத்தியோக சந்திப்பின்போதே ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.
இத்தாலியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பணியை நிறைவு செய்து இலங்கைக்கு வருகை தந்திருக்கும் எச்.ஈ. அப்துல் பத்தாஹ் ஜகார்டா, லண்டன் மற்றும் வொஷிங்கடனிலும் கடமையாற்றிய உயர் அனுபவங்களை உடையவர்.
“ இரு நாடுகளுக்கிடையிலான 2011க்கான வர்த்தகப் பெறுமானம் 1.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. ஏதிர்காலத்தில் இப்பெறுமானம் அதிகரித்த வளர்ச்சியைக் காண்பிக்கும். இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அமைதி நிலைமைகள் மற்றும் ஸ்தீரண நிலை என்பன இலங்கையின் பால் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனியார் முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.
முதலீட்டுப் பெறுமானத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து மேலும் அதிகரிப்பதற்கு நாங்கள் ஆவலாக இருக்கிறோம். இருதரப்பு முதலீட்டுக் காப்புறுதி உடன்படிக்கையினை இலங்கையுடன் கைச்சாத்திடுவதற்கும் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஏற்கனவே கைசாத்திடப்பட்டு நடைமுறையில் இருக்கும் வரி தவிர்ப்பு உடன்படிக்கையானது இருபக்க நாடுகளினதும் வர்த்தக உடன்பாட்டுக்குப் பயனளித்து வருவதாகவும் அப்துல் பத்தாஹ் தெரிவித்தார்.
“இலங்கையின் துறைமுக மற்றும் துறைமுக நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறைக் கட்டமைப்பு,உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பவற்றிலும் எமது கவனம் குவிய ஆரம்பித்துள்ளது. டுபாய்க்கும் இலங்கைக்குமிடையிலான சுற்றுலாத்துறையில் ஒரு வாரத்திற்கு 58 விமானங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. எயா அரேபியா, பிளை டுபாய், எமரேட்ஸ் மற்றும் எடிஹாட் ஆகிய விமானங்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இது இலங்கையுடான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்து வருவதன் சமிக்ஞையாக விளங்குவதுடன், இலங்கை முதலீட்டுத் துறையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்களுக்கு காண்பிப்பதாகவும் அமைந்துள்ளது.” எனவும் அப்துல் பத்தாஹ் தெரிவித்தார்.
“ஐக்கிய அரபு இராச்சியத்தின் தனியார் முதலீட்டாளர்களை வரவேற்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் முதலீட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்துவதை இலக்குகளில் ஒன்றாகக் கொண்டுள்ளார்” என இச்சந்திப்பின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானுக்கு அடுத்ததும் இரண்டாவதுமான வர்த்தக பங்காளராக ஐக்கிய அரபு இராச்சியம் காணப்படுகின்றது. 2011ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியமானது 448.6 மில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்திருந்தது. கடந்த ஆண்டில் இருநாட்டு வர்த்தக முதலீட்டு வருமானமானது 1.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வான வியாபார நடவடிக்கையே இந்த அடைவை ஏற்படுத்தியது.” என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“இலங்கையிலிருந்து தேயிலை, ஆடைகள், உணவுகள், தேங்காய், முத்துக்கள், டயர்கள், மரத்திலான பொருள்கள் என்பன ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு வர;த்தக அமைச்சர் ஷெய்க் லுப்னா அல் காசிம் கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன்போது இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய ஒன்றியத்தினை முதன்முறையாக ஆரம்பித்து இரு நாடுகளும் மிக வெற்றிகரமானதும் அதிக நன்மைககளை அளிக்கத்தக்கதுமான வியாபார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சந்தர;ப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அமைந்தது. இதற்கமைய இலங்கையில் தயாரிக்கப்பட்டு டுபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கைவினைப் பொருள்கள் மற்றும் ஏனைய உற்பத்திகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன” எனவும் அமைச்சர; றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment