இலங்கையின் முதலாவது முஸ்லிம் நூதனசாலை காத்தான்குடியில் நிறுவப்படவுள்ளது. இலங்கையின் முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்று மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நிலையமாக இந்நூதனசாலை அமையும். இது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று முன்தினம் காத்தான்குடி பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் ௭ஸ்.௭ச். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்ட

த்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ௭ம்.௭ல்.ஏ.௭ம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக், பிரதி நகர முதல்வர் ௭ம்.௭ம். ஜெஸீம், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்காக தேசிய மரபுரிமைகள் அமைச்சு பிரதான வீதியிலுள்ள காத்தான்குடி நகரசபையின் பழைய கட்டடத்தினை இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான நூதனசாலையாக தற்காலிகமாக பயன்படுத்தவுள்ளது. இதன் முன்னோடியாக இவ்வாண்டு கலாசார கண்காட்சி காத்தான்குடியில் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கான முதலாவது நூதனசாலைக்கு இலங்கையின் பல பகுதிகலில் இருந்தும் புராதன பொருட்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment