Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 12, 2012

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் மாணவன் சாதனை

2012 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் எம்.எஸ்.எம்.நுஸ்கி ஆண்களுக்கான
21வயதுக்குட்பட்ட முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

மாத்தறை பெலியத்தை டி.ஏ. ராஜபக்ஸ மைதானத்தில் ந
டைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் எம்.எஸ்.எம்.நுஸ்கி முப்பாய்ச்சல் போட்டியில் 14.36 மீற்றர் துரம் பாய்ந்து மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கத்தினை சுவிகரித்துள்ளார்.

2012ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் எம்.எஸ்.எம்.நுஸ்கி முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தினைப் பெற்றிருந்தார். இன்று அகில இலங்கை ரீதியான போட்டியில் 14.36 மீற்றர் பாய்ந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சல் போட்டியில் 14.65 மீற்றர் தூரம் பாய்ந்து எம்.எஸ்.எம்.நுஸ்கி மாத்திரமே கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கப் பதக்கத்தினைப் பெற்றிருந்தார் என்பது விசேட அம்சமாகும்.

அத்தோடு அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 2012ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியிலும் முப்பாய்ச்சல் போட்டியில் நுஸ்கி முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

நிந்தவூர் பிரதேசத்திற்கும், தான் கல்வி கற்கும் அல்-அஷ்றக் தேசிய பாடசாலைக்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ள இவருக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.இப்றாகிம் ஆரம்பம் முதல் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். மற்றும் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.எம்.நவாஸ், எம்.பி.மஹ்றூப், ஏ.எம்.நழீம், எச்.ஜெமீல், எஸ்.எம்.உபைதீன் ஆகியோரும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

மிக இளம் வயதில் அதீத திறமையினை வெளிக்காட்டும் எம்.எஸ்.எம்.நுஸ்கி அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தினை பெற்றிருப்பதன் மூலம் எதிhகாலத்தில் தேசிய மெய்வல்லுனர் அணியில் இடம்பிடித்து எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்ப்பார் என திடமாக நம்புவதாக அவரது பயிற்சியாளர் ஐ.எல்.எம்.இப்றாகிம் தெரிவித்தார்.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம்; பெற்று பாசாலைக்கு பெருமை சேர்த்துள்ள வீரர் நுஸ்கிக்கு அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுதீன் மௌலானா மற்றம் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்று பாசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ள நுஸ்கியை பாராட்டிக் கௌரவிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பயிற்சியாளர் ஐ.எல்.எம்.இப்றாகிம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment