அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதி மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவனமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்று இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோணாவத்தைப் பகுதி மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை வழங்குவதற்கு வசதியாக பல லட்சம் ரூபா செலவில் மேற்படி எரிபொருள் விநியோக நிலையத்தினை சர்வதேச தொண்டு நிறுவனமொன்று சில வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்துக் கொடுத்தது.
ஆயினும், இந்த எரிபொருள் விநியோக நிலையமானது அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை பயன்படுத்தப்படாமல் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றது. இதனால், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் சேமிக்கும் தாங்கி போன்றவை சேதமடைந்து வருகின்றன.
இதேவேளை, குறித்த எரிபொருன் விநியோக நிலையமானது மீனவ சங்கமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த நிலையில், குறித்த எரிபொருள் விநியோக நிலையத்தினை சீராக இயக்கி மீனவர்களுக்கான எரிபொருளினை வழங்கக் கூடிய பொது நிறுவனமொன்றிடம் இந் நிலையத்தினைக் கையளிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

+(1).jpg)
No comments:
Post a Comment