யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி சிறந்த நிலையில் உள்ளதாக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வடக்கை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்குரியது. இந்தப் பணியை அரசு செய்து கொண்டு வருகின்றது.
எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது உலக நாடுகளின் பார்வையில் யாழ்ப்பாணம் இருக்கின்றது. அதன் அபிவிருத்தி தொடர்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்றுடன் கலந்துரையாடுவார்கள்.
யாழில் நடைபெற்று வரும் அபிவிருத்தி வேறு எந்த மாவட்டங்களிலும் நடைபெறாத அபிவிருத்தியாக இருந்து வருகின்றது.
அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வடக்கை புனரமைத்து அந்த மக்களின் கைகளில் அவர்களின் அபிவிருத்தியைக் கொடுப்பது அரசின் நீண்டகாலத்திட்டமாகும்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் அனைவரும் அபிவிருத்தி என்ற ஒரே நோக்கில் பயணிக்கக வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தி சாத்தியமாகும் என்றார்.
இந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளுடான சந்திப்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் ரூபவதி வரதலிங்கம், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்.போதான வைத்தியாலை திட்டல் அதிகாரி, மதத்தலைவர்கள் சமூகப்பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(அத தெரண நிருபர்)

No comments:
Post a Comment