Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Saturday, October 20, 2012

UNICEF – WEDF ஏற்பாட்டில் சுகாதார விழிப்புணர்வுச் செயலமர்வு

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் யுனிசப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற் கொள்ளப்பட்டு நீர் சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வொன்று பூநொச்சிமுனையில் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.


பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்ம
ா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.றபீக் மற்றும் ஏ.எல்.றஹ்மத்துல்லா உட்பட பூநொச்சிமுனையிலுள்ள குடும்ப தலைவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சுகாதார நடைமுறைகள் தொடர்பாக உரையாற்றப்பட்டது.

இங்கு உரையாற்றும் போது சுத்தமாக இருப்பதன் மூலம் சுகதேகியாக வாழமுடியும் என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய சல்மா அமீர் ஹம்சா சுகாதார பழக்க வளக்கங்களை நாம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடையே அது தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும்.

நீரைப்பற்றி சுத்தமான நீரைப்பற்றி அறிந்திருப்பது முக்கியமாகும். நாம் சுத்தமாக இருப்பதுடன் நமது பிள்ளைகளையும் சுத்தத்துடன் வளர்க்க வேண்டும்.

சுத்தமாக இருந்தால் சுகதேகியாக வாழமுடியும். நமது வீடு மற்றும் சுற்றப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நமது சூழலையும் சிறந்த சுகாதார சூழலாக வைத்திருக்க முடியும்.

நாம் எதையும் சாப்பிடுவதற்கு முன்னர் கைகளை கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு சாப்பிட வேண்டும். கைகளுவுதல் தொடர்பில் நமது பிள்ளைகளுக்கும் கூறி அவர்களையும் இதற்கு பழக்க வேண்டும்.

இவ்வாறான சுகாதார வேலைத்திட்டத்தினை நான் எனது அமைப்பினுடாக யுனிசப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற் கொண்டு வருகின்றோம்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் தோறும் மாணவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளை பொதுச் சுகாதார பரிசோகர்களை கொண்டும், சுகாதார வைத்திய அதிகாரிகளை கொண்டும் நடாத்தி வருகின்றோம்.

தொற்று நோய்களில் இருந்தும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை நாம் இவ்வாறான சுகாதார பழக்க வளக்கங்களினூடாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என சல்மா ஹம்சா மேலும் இங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment