அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லினை கௌரவ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்படுவதனையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர்
அதாஉல்லா அகமட் சகி மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சரின் இணைப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் உள்ளிட்ட ஏனைய முக்கிய பிரமுகவர்களையும் படத்தில் காணலாம்.
தேசியரீதியாக நடைபெறும் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபை ஏற்பாடு செய்த மரநடுகை வைபவம் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களால் மரக்கன்று நடப்படுவதனையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி, பிரதி முதல்வர், அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் அவர்கள் உள்ளிட்ட ஏனைய உயர் அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் கௌரவ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா உட்பட ஏனைய முக்கிய பிரமுகர்கள் புத்தகங்களை பார்வையிடுவதனை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment