Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

9 பேரை எரித்துக் கொன்ற வழக்கு: துபாய் சிறையில் இருந்து 27 ஆண்டுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு முதியவர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பால் ஜார்ஜ் நாடார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு வேலைக்காக துபாய் நாட்டுக்குச் சென்றார். அப்போது அவர் தன்னுடன் தன் மனைவி மற்றும் 2 வயது சுமித்ரா ஆகியோரை அழைத்து சென்றார்.


துபாயில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பால் ஜார்ஜ் நாடாருக்கு அங்கு வைத்து சுப்பராஜன் என்ற மகன் பிறந்தான். பால் ஜார்ஜ் நாடாருக்கு குடிப்பழக்கம் உண்டு.

கடந்த 1985-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி இரவு பால் ஜார்ஜ் நாடார், பிரிச் அல் முரர் என்ற பகுதியில் இருந்த ஒரு குடிசை வீடு மீது பெயிண்ட் தின்னரை ஊற்றி தீ வைத்துவிட்டார். இதில் அந்த குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 பாகிஸ்தான் பெண்கள் மற்றும் அவர்களது 7 குழந்தைகள் ஆக மொத்தம் 9 பேர் உடல் கருகி செத்தனர்.

துபாய் போலீசார் பால் ஜார்ஜ் நாடாரை கைது செய்து சிறையில் அடைந்தது. சுமார் ஓராண்டு நடந்த 9 பேர் கொலை வழக்கில் 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்த கோர்ட்டு, பால் ஜார்ஜ் நாடாருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பால் ஜார்ஜ் நாடார் குடும்பத்தினர் சமரச பேச்சு நடத்தினார்கள். சுமார் 10 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 1996-ம் ஆண்டு சுமார் 16 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்டஈடாகப் பெற்றுக் கொண்டனர்.

அதற்கு பதிலாக பால் ஜார்ஜ் நாடாரை மன்னித்துவிட்டதாக கூறி அவர்கள் கோர்ட்டில் கடிதம் கொடுத்தனர்.

என்றாலும் பால் ஜார்ஜ் நாடார் விடுவிக்கப்படவில்லை. துபாய் ஜெயிலில் தனி செல்சில் வைக்கப்பட்டிருந்தார். தன்னை விடுதலை செய்யக்கோரி அவர் கொடுத்த மனுக்கள் கண்டு கொள்ளப்படவில்லை.

தனக்கு வயதாகி விட்டதையும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையும் குறிப்பிட்டு அவர் மனு கொடுத்திருந்தார். அந்த மனுக்களும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.

இதையடுத்து தன் முதுமை மற்றும் அறுவை சிகிச்சையை விளக்கி பால் ஜார்ஜ் நாடார் மீண்டும் மனு செய்தார். அந்த மனுவை துபாய் ஜெயில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பால் ஜார்ஜ் நாடார் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பது தெரிய வந்தது.

துபாய் ஜெயில் வரலாற்றில் இவ்வளவு நீண்ட நாட்கள் யாரும் சிறையில் இருந்தது இல்லை. இதை அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் அவரை விடுவிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி கடந்த புதன்கிழமை சிறைத் துறையினர் பால் ஜார்ஜ் நாடாரை துபாய் அட்டர்னி ஜெனரல் முன்பு நிறுத்தினர். அவரை விசாரித்த அட்டர்னி ஜெனரல், அவரை விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

இந்த வாய்மொழி உத்தரவை ரிலீஸ் ஆர்டர் தயாராக 3 நாட்கள் ஆகும். அதன் பிறகு ரிலீஸ் ஆர்டர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த கடிதம் பெற்றதும் பால் ஜார்ஜ் நாடார் விடுதலை செய்யப்படுவார்.

39 வயதில் சிறை சென்ற பால் ஜார்ஜ் நாடாருக்கு தற்போது 66 வயதாகிறது. அவர் சிறை சென்றபோது அவரது மகள் சுமித்ராவுக்கு 10 வயது. தற்போது சுமித்ராவுக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை உள்ளது.

சுமித்ரா தன் கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், என் தந்தை விடுதலையாவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் தாத்தா மரியதாசன், என் தந்தை திரும்பி விடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். 93 வயது வரை வாழ்ந்த அவர் கடந்த டிசம்பரில் மகனை பார்க்காமலேயே இறந்து போனார் என்றார்.

பால் ஜார்ஜ் நாடாரின் மகன் சுப்பராஜன் துபாயில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவர் கூறியதாவது:-

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு என் தந்தை விடுதலை ஆகியுள்ளார். அவர் செய்த தவறுக்கான தண்டனை அனுபவித்து விட்டார். கடைசி காலத்தில் சொந்த மண்ணில் வாழ விரும்பினார்.

என் தாய் ஏற்கனவே நாகர்கோவிலில் உள்ளார். அவர் எங்கள் தந்தையை மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறார்.

இவ்வாறு சுப்பராஜன் கூறினார்.

ஜெயிலில் இருந்து விடுதலை ஆனதும் பால் ஜார்ஜ் நாடாரை துபாயில் இருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment