சிறை கைதிகளின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பாராளுமன்றில் இன்று (10) உரையாற்றிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இவ்வாறு கண்டனத்தை வெளியிட்டார்.
வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தால் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் மீதும் இவ்வாறு துப்பாக்கி நீட்டப்படுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்தார்.
இதேவேளை, ஒவ்வொரு வருடமும் சமர்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கென அதிக நிதி ஒதுக்கப்படுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பதாகவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தையும் எதிர்ப்போம் எனவும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment