Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, November 09, 2012

திகழி முஸ்லிம் கிராம விகாரை நிர்மாணம் இன முரண்பாட்டை தூண்டும் நோக்குடையது


புத்தளம் கட்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட நூறு வீதம் முஸ்லிம்களை கொண்டுள்ள திகழி கிராமத்தில் அநியாயமான முறையில் வன்முறையை தூண்டும் நோக்குடன் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ்உறுப்பினர்  எஹ்யா ஆப்தீன் குற்றம் சாட்டினார்.

சற்று முன்னர் அவருடன் தொடர்பு கொண்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கும்போது, நூற்றுக்கு நூறுவீதம் முஸ்லிம்களை மட்டும் கொண்டுள்ள திகழி முஸ்லிம் கிராமத்தில் நியாயமற்ற முறையில் நிர்மாணிக்கப் படும் விகாரை புத்தளம் தொகுதில் வன்முறை ஒன்றை தூண்டும் நோக்கில் தீய சக்திகளினால் மேற்கொள்ளப் படுவதாகவும் இது தொடர்பாக நீதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இது தொடர்பாக உடடியாக கட்டிபிட்டி பிரதேச செயளாரின் அறிக்கையை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கும்போது குறித்த முஸ்லிம் கிராமத்திலோ அல்லது அதை மிக அண்மித்த பகுதியிலோ பௌத்த மக்கள் இல்லாத நிலையில் கண்டகுழி என்ற கிராமம் ஒன்றில் இருந்து வரும் விஹாராதிபதி ஒருவர் அங்கு அமர்ந்து நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் . இது இனங்கள் அமைதியாக வாழும் பிரதேசதில் முஸ்லிம்களை ஆவேசப்படுத்தி இனமுரண்பாடு ஒன்றை தோற்று விக்கும் நோக்குடன் இடம்பெறுகிறது. இதற்கு  பின்னால் பலமான சக்திகள் உள்ளது என்றும் தெரிவித்தார் .
குறித்த விகாரை நிர்மாணம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது புத்தளம் கட்பிட்டி பிரதேச சபைக்குள் அமைத்திருக்கும் நூறு வீதம் முஸ்லிம்களை கொண்டுள்ள திகழி கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணி சிங்கள பெண் ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெறப்பட்டுள்ளது . தற்போது அந்த காணியை குறித்த சிங்கள பெண் தனக்கு சொந்தமானது என்று கோருகிறார் , காணியை அடமானமாக வைத்து பணம் பெற்றவர் காணி தனக்குரியது என்று கூறுகிறார் தற்போது காணி தொடர்பாக வழக்கு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த காணியில் தற்காலிக கட்டடத்தில் பெளத்த விகாரை மற்றும் பெளத்த அறநெறி கற்றை என்பன வெளிக் கிராம மாணவர்கள் சிலரை கொண்டு இயங்கிவந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக திகழி முஸ்லிம் கிராம பிரமுகர்கள் விகாரை நிர்மான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் சுமுகமான பேச்சு நடத்தி குறித்த இடத்தில் விகாரை அமைப்பது இல்லை என்ற முடிவு எட்டப்பட்டதுடன் குறித்த இடத்துக்கு பதிலாக வேறு ஒரு இடம் கிராம முஸ்லிம்களால் வழங்குவதாகவும் உடன்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அந்த உடன்பாட்டை மீறி தற்போது குறித்த இடத்தில் நிரந்தரமான விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருகிறது என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் .

No comments:

Post a Comment