பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டத்தரணிகள் ஊடாக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
நீலகாந்தன் சட்டத்தரணிகள் நிறுவனம் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த காலங்களைப் போன்றே கடமைகளை ஆற்றி வருகின்றேன். பக்கச்சார்பின்றி தொடர்ந்தும் கடமையாற்றுவேன்.
அச்சமின்றி நாட்டின் நீதியை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் என பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளதாக நீலகாந்தன் சட்டத்;தரணி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதனை நிரூபிக்க முடியும் என சட்டத்தரணி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment