Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, July 15, 2012

முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிளவில்லை - இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் மறுப்பு.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியை தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் அதிருப்தியுற்று கட்சியில் இருந்து வெளியேறத் தயாராகி வருகின்றனர் எனும் செய்திகளில் உண்மையில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் அடியோடு மறுத்துள்ளார். 

அது மாற்றுக் கட்சியினரால் திட்டமிட்டு பரப்பபட்டு வருகின்ற வெறும் வதந்தியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்று கட்சியின் அதியுயர் பீடம் பலமுறை கூடி ஆராய்ந்த அதேவேளை தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதியுடனும் அரச உயர் மட்டத்தினருடனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, முஸ்லிம் சமூகத்தினதும் கட்சியினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு அரச தரப்புடன் இணைந்து போட்டியிடலாம் என்கின்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

ஜனநாயக ரீதியிலான ஒரு கட்சி என்ற அடிப்படையில் உயர் பீடத்தினர் மத்தியில் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தன. எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை இரவு தலைவர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். 

ஆனால் அது பெரியளவில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவில்லை. குறிப்பாக எமது செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் இம்முடிவினை எதிர்த்து மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாகவும் வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை. 

எமது கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் எதிரணியினரால் திட்டமிட்டு பரப்பபட்டு வருகின்ற வதந்தி தொடர்பில் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களை நான் சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது அவர் எத்தகைய மாற்று நடவடிக்கைகளிலும் ஈடுபடும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. சுகவீனம் காரணமாகவே தாருஸ்ஸலாம் செல்லாமல் தான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். 

ஆனால் எமது கட்சிக்குள் நிலவும் மாற்றுக் கருத்துகளை பூதாகரமாக வெளிக்காட்டி எதிரணியினர் அரசியல் லாபம் தேட முற்படுகின்றனர். அதன் வெளிப்பாடே இந்த வதந்தியாகும். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் எதுவும் செய்யாத - அவர்களால் செய்ய முடியாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது சாணக்கியத்தினால் சாதித்துக் காட்டியிருப்பதை பொறுக்க முடியாத மாற்று முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தமது பலவீனத்தை மூடி மறைப்பதற்காக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக புரளிகளைக் கிளப்பி விட்டுள்ளனர். 

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு ஜனாதிபதி முன்வருவார் என்றோ அம்பாறை மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும் திருமலையில் 3 ஆசனங்களையும முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்வார் என்றோ கனவிலும் நினைத்திராத அமைச்சர்கள் அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோருக்கு தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சானக்கியமிக்க செயற்பாடு பேரிடியைக் கொடுத்துள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இந்த அரசியல் புரட்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத இவர்கள் அவற்றை முறியடிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியுற்ற நிலையிலேயே தமது இறுதி ஆயுதமாக முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டிருப்பதாக வதந்தியைக் கிளப்பி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். 

உண்மையில் எமது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பிளவுக்கான வாய்ப்பும் இல்லை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சி பிளவுபடுவதற்கு எமது செயலாளர் நாயகம் ஹசன் அலி ஒருபோதும் துணை போக மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்" என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment