Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, July 18, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நிலை.

(எம்.எஃப்.றிபாஸ்)

நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரச தரப்புடன் இணைந்தும் தனித்தும் போட்டி இட உள்ளது அந்த வகையில் அம்பாரையில் அரசுடன் இணைந்து ஆறு வேட்பாளர்களை நிறுத்தியும், மட்டக்களப்பில் அரசுடன் இணைந்து இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியும், திருக்கோணமலையில் தனித்தும் போட்டி இடும் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது சில நேரம் இன்றைய இறுதி முடிவின் அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பிலும் முஸ்லீம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் எது எவ்வாறு இருந்தாலும் இக்கால கட்டத்தில் அரசை விட்டு முஸ்லீம் காங்கிரஸ் பிரிந்து செல்லாது என்பது கட்சி தலைவரின் கூற்று என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது சம்மந்தமாக உங்கள் கருத்துக்களை தந்தால் நாங்கள் உரிய இடத்துக்கே தெரியப் படுத்துவோம்.

(இம்போர்ட் நியுஸ்)

2 comments:

  1. ஆனால் எது எவ்வாறு இருந்தாலும் இக்கால கட்டத்தில் அரசை விட்டு முஸ்லீம் காங்கிரஸ் பிரிந்து செல்லாது என்பது கட்சி தலைவரின் கூற்று என்று எமது செய்தியாளர் தெரிவித்தார் இது சரியான கூற்றுத்தான் அவ்வாறே தலைவர் நடந்து கொள்ளட்டும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அரசுடன் இனைந்துதான் இருக்கும் ஆனால் தேர்தல் கிழக்கில் தனித்தும் ஏனைய பகுதியில் அரசுடன் சேர்ந்தும் கேட்கும்.

      Delete