(அத தெரண )
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவின் காரணமாக கிழக்கு தேர்தல் முடிவு கேள்விக்குறியாகியுள்ளது என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் முடிவைப் பற்றி யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளப் போவதில்லை ஆனால் தனித்து போட்டியிட்டதன் காரணமாவே தேர்தல் முடிவு கேள்விக் குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக கிழக்கு தேர்தல் களம் சுவாரசியம் அடைந்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு கட்சி போராளிகளின் அழுத்தம் காரணமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment