அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸி.எஹியாகான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீமின் அன்பான அழைப்பை ஏற்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மூலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளராகவும் தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட இவர் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கணடியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் தலைவருடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதய கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் , கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.எம்.பிர்தௌஸ் , ஏ.பஸீர் , ஏ.எம்.பறகதுள்ளாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த கல்முனை மாநகரசபை தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1970 விருப்பு வாக்குகளைப்பெற்ற ஏ.ஸி.எஹியாகான் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.
முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகனான இவர் இம்முறை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு தனது முழு ஆதரவினை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment