Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, August 12, 2012

ஈரானில் நிலநடுக்கம்:200 பேர் மரணம்,2000 பேர் காயம்

ஈரானில் 11 நிமிட இடைவெளியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 200 பேர் உயிரிழந்தனர்.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஆஹார், ஹாரிஸ், வர்சாகான் ஆகிய நகரங்களை சனிக்கிழமை மாலை 4.53 மணிக்கு நிலநடுக்கம் உலுக்கியது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளுக்கும் மேல் பதிவானதாக, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின்
புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் 200 பேர் வரை இறந்ததாகவும்,2000 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கங்களால் 60 கிராமங்கள் பலத்த சேதமடைந்தன. 4 கிராமங்கள் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கண்ட நகரங்களில் 5 முறை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனால் பீதியில் உறைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்ட டப்ரிஸ் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஈரான் மீட்புப் பணிகள் துறைத்தலைவர் மஹ்மூத் முஸôபர் இது குறித்துக் கூறுகையில், ""அருகிலுள்ள கிராமங்களை ரேடியோ டிரான்ஸ் ரிசீவர் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.
ஈரானின் பாம் நகரத்தில் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks Xnews

No comments:

Post a Comment