மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முனனாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனின் ஆட்கள் இருக்கின்றனர், இவர்களின் அச்சுறத்தல் நடவடிக்கைக்கு ஆதரவாக படையினரும் இருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் இன்று (12.8.2012) நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் தெரிவிததார்.மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ,
“எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தோல்வியை சந்திக்கவுள்ள இவர்கள் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மீது அச்சுறுத்தல் செய்து வருகின்றனர்.
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் செய்வதற்கு முதல் தினம் எமது தலைமை வேட்பாளர் துரை ராஜசிங்கத்தின் வீட்டுக்கு பூட்டு போட்டதிலிருந்து இது வரைக்கும் 9 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
எமது கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் அவர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடும் போது அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தேர்தல் பிரச்சார பிரசுரங்கள் பறிக்ப்பட்டுள்ளன எமது கட்சி ஆதரவாளர்ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையிலும் கூட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முனனாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனின் ஆட்கள் இருக்கின்றனர் இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு ஆதரவாக படையினரும் உள்ளனர்.
இவர்களின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை தொடர்பாக நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.
எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை சகிக்க முடியாத இவர்கள் இதை செய்கின்றனர் என தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பாhளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, சி.யோகஸ்பரன் உட்பட அதன் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment