Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 15, 2012

காத்தான்குடி பிரதான வீதியில் பெண்களுக்கான பள்ளிவாயல்

(நல்ல நண்பன்)
பெண்களுக்கான பள்ளிவாயல் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்ற எனது மிக நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது

காத்தான்குடி பிரதான வீதியில் பெண்களுக்கான பள்ளிவாயல் ஒன்று தொழுகைக்காக அமைக்கப்பட வேண்டு மென்ற எனது மிக நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது என காத்தான்குடி நகர சசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்தகிகுமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.


காத்தான்குடி பெரிய மௌலானா கபுறடி பள்ளிவாயல் வளாகத்தில் பெரிய மௌலானா கபுறடி பள்ளிவாயல் நிருவாகத்தின் ஆதரவுடன் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் நிதியுதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்தகிகுமான அமைப்பின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள பெண்களுக்கான பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே சல்மா அமீர் ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய சல்மா அமீர் ஹம்சா மிக நீண்ட காலமாக காத்தான்குடி பிரதான வீதியில் பெண்களுக்கு தொழுவதற்கான பள்ளிவாயல் ஒன்று அமையப் பெற வேண்டு மென நான் முயற்சித்து வந்தேன்.

அந்த வகையில் அதற்காக முஸ்லிம் பெண்கள் அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.

அதே போன்று இந்த பள்ளிவாயலை நிர்மானிப்பதற்கு காத்தான்குடி பெரிய மௌலாளா கபுறடி பள்ளிவாயல் நிருவாகம் அனுமதியளித்து அதை நிர்மானிப்பதற்கு முன் வந்தது.

இதற்காக முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கும் காத்தான்குடி பெரிய மௌலான கபுறடி பள்ளிவாயல் நிருவாகத்திற்கும் நன்றி கூறுகின்றறேன்.

இந்த பெண்களுக்கான தொழுகை அறையை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன.

அதற்காகன அனுமதி ஏற்கனவே தரப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பிற்கு இந்த இடத்தில் கட்டு வதற்கு அனுமதி கேட்ட போது பள்ளிவாயல் நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியினால் பயணிக்கும் பெண்கள் தமது பர்ளான தொழுகையினை ஹழா இன்றி தொழுவதற்காக இந்த பள்ளிவாயல் பெண்களுக்கென்று அமைக்கப்படுகின்றது.

இதற்காக முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கும் எனக்கும் கபுறடி பள்ளிவாயல் நிருவாகத்திற்கும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சல்மா ஹம்சா மேலும் தெரிவித்தார்.









No comments:

Post a Comment