இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் முறையிட்டுள்ளார்.
பொலிஸார் சிறந்த முறையில் செயற்படாமையினாலேயே குறித்த பிரச்சினை பாரதுரமானதாக மாறியது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்
. இதன் காரணமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவை நீக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'குறித்த பொலிஸ் அதிகாரி அமைச்சர் அதாவுல்லாவின் கையாள் போன்று கடந்த திங்கட்கிழமை செயற்பட்டார். இது தொடர்பில் நான் பொலிஸ் மா அதிபரிடம் பேசியுள்ளேன். பின்னர் எழுத்து மூலம் முறைப்பாடும் செய்யவுள்ளேன் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களிடையே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் காரணமாக பல வாகனங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் தேசமாக்கப்பட்டன.
இதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் திணைக்கம் கோரியுள்ளது என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.
"பொலிஸ் மா அதிபர் பல விசாரணை குழுக்களை நியமித்துள்ளார். அப்பகுதியில் அன்றைய தினம் ஏற்படக்கூடிய வன்முறைகளை தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையாளர் மேற்கொண்டுள்ளார். எனினும் வன்முறை மூன்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
நன்றி தமிழ்மிரர்

No comments:
Post a Comment