Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 15, 2012

இன்று அலுவலகம் வராவிட்டால் இனி அவ்வளவுதான்!

தொழில்நுட்ப அதிகாரிகள், மின்சார அதிகாரிகள் ஆகியோர் இன்று (15) கடமைக்கு திரும்பாவிட்டால் ஒய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என இலங்கை மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் மின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு இந்த வாரத்தினுள் துரிதமாக நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. 


அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வேலைக்குத் திரும்பும் மின்சார சபை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் நாசகார வேலைகளில் ஈடுபட்டு மின்விநியோகத்தை தடுக்க முயல்வதாக மின்சார சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது கடமைக்குத் திரும்புமாறு சகல மின்சார சபை ஊழியர்களுக்கும் மின்சார சபை அழைப்பு விடுத்துள்ளதோடு அச்சுறுத்தல்கள் தொடர்பாக துரிதமாக செயற்பட இராணுவத்தின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்தது.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நேற்று (14) வரை 50 வீதமான ஊழியர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளனர். ஏனைய ஊழியர்கள் இன்றைக்குள் கடமைக்குத் திரும்பாவிட்டால் ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர்களை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் மின்சார சபை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 50 வீதமான ஊழியர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.

சில பிரதேசங்கள் நாசகார வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதோடு சில பிரதேசங்களில் மின் மாற்றிகளை செயலிழக்கச் செய்யவும், பிரதான பரிமாற்றி தொகுதிகளுக்கு சைக்கிள் செயின்களை வீசி விநியோகத்தை நிறுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக மின் பொறியியலாளர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

கடமைக்குத் திரும்புவதற்கு சிற்றூழியர்கள் தயாராக உள்ள போதும், சிலர் அவர்களுக்கு தொலை பேசியில் அச்சுறுத்தல் விடுத் துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

கடமைக்கு திரும்பிய ஊழியர்களுக்கு கடமை முடிந்து செல்கையில் பல்வேறு தடங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இது தவிர மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை திறந்து விடுதல், எரிபொருள் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆர்ப்பாட் டக்காரர்கள் தடங்கல் செய்துள்ளதாகவும் மின்சார சபை கூறியது. இதனை அடுத்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று முதல் இராணுவத்தின் விசேட குழுவொன்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து இராணுவத்தின் 0113075792 அவசர இலக்கத்துக்கு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

இதுதவிர மின் பரிமாற்று தொகுதி மின்மாற்றி என்பவற்றுக்கு சேதம் ஏற்படுத்துவோர் குறித்து 119 இலக்கத்திற்கோ இராணுவ அவசர இலக்கத்திற்கோ அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment