இச்சம்பவத்தையடுத்து அப் பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சிறுமி இன்னுமொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் குறித்த சிறுமியை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த பின்னர் சடலத்தை வயலொன்றுக்குள் வீசியுள்ளார். இதைக் கண்ட மற்றைய சிறுமி ஓடிச் சென்ற சம்பவத்தை வீட்டில் கூறியதையடுத்தே ஊர்மக்களால் சடலம் மீட்கப்பட்டது.
கொலையாளியை பிடித்த ஊர்மக்கள், அவரை நையப்புடைத்தப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னரே கொலையாளி கொழும்பிலிருந்து வெலிகமையிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. வெலிகமை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment