Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, August 15, 2012

இந்திய சுதந்திர தினம் இன்று

இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் திகதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். 

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி எற்ற
ி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப் பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.

உலக அளவில் பெருமை கொள்ளும் படி செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா சார்பில் விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சியை துவக்குவோம் என சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் சூளுரைத்தார்.

இந்தியாவின் 66வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முப்படை தளபதிகளை சந்தித்தார். பின்னர் 7.34 மணிக்கு கொடி ஏற்றினார்.

தேசிய கொடியேற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: உணவு தானியங்கள் வீணாவது நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. உலக பொருளாதாரம் வறுமை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுதந்திர தின வாழ்த்துக்களை இந்திய மக்களுக்கு தெரிவித்தார்.

மேலும், சென்னை ஜார்ஜ் கோர்ட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

சென்னை ஜார்ஜ் கோட்டையில் 12வது முறையாக ‌தேசிய கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களை வணங்குகிறேன். தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த வளர்ச்சி விகிதத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது; இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நன்றி நண்பன்

No comments:

Post a Comment