(aderana)
கொழும்பு வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் லலந்த அபேரணசிங்கவின் தெஹிவளை வீட்டிற்கு அருகில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றத் தடுப்புத் திணைக்களம் இன்று (17) முதல் விசாரணை நடத்தும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்
வைத்தியர் லலந்த அபேரணசிங்கவின் தெஹிவளை வீட்டிற்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவு வைத்தியர்கள் நேற்று (16) நண்பகல் 12 மணி தொடக்கம் இன்று (17) நண்பகல் 12 மணிவரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment