(Aderana)
சென்னையிலிருந்து இலங்கைக்கு மேலும் 2 ரயில்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ரூ.120 கோடி மதிப்பீட்டில் தலா 6 ரயில் பெட்டிகள் கொண்ட 20 ரயில்களை செய்து தருவது தொடர்பாக இலங்கை அரசுக்கும், சென்னையிலுள்ள ரயில் பெட்டி இணைப்பு (ஐ.சி.எப்.) தயாரிப்பு தொழிற்சாலைக்கும் இடையே 2009-ம் ஆண்டில் ஒப்பந்தம்
கையெழுத்தானது.
இதுவரை 108 பெட்டிகள் கொண்ட 18 ரயில்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இந்த நிலையில் 19-வது மற்றும் 20-வது ரயில் தயாரிக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் பெட்டிகளின் மீது சிவப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் பணி முழுவதுமாக முடிவடைந்த பின்பு, சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
கண்கவரும் வண்ணங்களில் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியும் 30 முதல் 35 தொன் எடை கொண்டவையாகும். சாதாரண பெட்டிகள், குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டிகள் என இரண்டு வகைகளையும் கொண்டவை இந்த ரெயில்கள், சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து முதன் முதலாக 6 பெட்டிகள் கொண்ட முதல் ரயில் கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலை கடந்த நிதியாண்டு 2011-12-ல் 1,511 பெட்டிகளைத் தயாரித்து சாதனைப் படைத்தது. மின்சார ரெயிலுக்காக 405 பெட்டிகளையும், கொல்கத்தா மெட்ரோ ரெயிலுக்காக குளிர்சாதன வசதி கொண்ட 48 பெட்டிகளையும், அதிகபட்சமாக குளிர் சாதன வசதியில்லாத 716 பெட்டிகளையும் ஐ.சி.எப். தயாரித்துள்ளது. 2012-13-ம் ஆண்டு நிறைவில், 1,600 ரெயில் பெட்டிகளை தயாரிக்க சென்னை ஐ.சி.எப். முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment