Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, August 16, 2012

அக்கரைப்பற்றில் எவரும் நோன்பு திறப்பதற்கு தடையில்லை; ஹக்கீமையே எதிர்த்தோம்: அதாவுல்லா

TM
"அக்கரைப்பற்றில் நோன்பு திறப்பதற்கு எவருக்கும் தடைகள் விதிக்கவில்லை. இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்துக்கின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம்" என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்..

குறித்த மக்கள் எதிர்ப்புப் பேரணியில் தேசிய காங்கிரஸ் ஆதர்வாளர்கள் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை நடந்த எதிர்ப்பு பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. 

இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அதாவுல்லா,

"அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூன்று சமூகங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய  ஒரு நேர்மையான பொலிஸ் அதிகாரியும் யாருக்கும் பக்கச் சார்பாகவோ, அநீதியாகவோ செயற்படாத ஒருவர். இவரை குறைகூறி திரிவது தனது அரசியலுக்கு வங்குரோத்து நிலமை ஏற்பட்டுள்ளதையே காண முடிகிறது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, நோர்வே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைத்து மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

இதற்கு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் இம்மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நினைக்கின்றேன். அக்கரைப்பற்றில் நாங்கள் எவருக்கும் நோன்பு திறப்பதற்கு தடைகள் விதிக்கவில்லை.

இனவாதத்தை பேசி நாட்டிற்கும், சமூகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்தி திரிகின்ற ஹக்கீமையே நாம் எதிர்த்தோம். முகமூடி மற்றும் கறுப்புடை அணிந்த முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்கள் சுமார் 35 பேருக்கு மேற்ப்பட்டவர்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அன்றிறவு அக்கரைப்பறிறில் நடமாடியதைக் கண்டு மக்கள் அச்சப்பட்டனர்.

இதன் விளைவாகவே அடுத்த நாள் ஹக்கீமுக்கு எதிராக அக்கரைப்பற்று மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இங்கு எவ்விதமான தங்கு தடையின்றி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நோன்பு திறந்து விட்டுச் சென்றுள்ளார்கள்.

இது எங்களுடைய பெருந்தன்மையாகும். தேசிய காங்கிரஸ் இந்நாட்டில் வாழ்கின்ற மூவின சமூகங்களையும் அனுசரித்து செல்கின்ற ஒரு தேசிய கட்சியாகும். அதன் பக்கம் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றார்கள். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தனது வாக்கு வங்கி குறைந்து காணப்படுவதால் அம்பாரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை குறை கூறுகின்ற அளவிற்கு அவருடைய தலைமைத்துவம் மாறியிருக்கின்றது. 

எந்த தயவும் இல்லாமல் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே கைப்பற்றும். குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டி மக்களை குழப்பும் சிந்தனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். மக்கள் தெளிவாக விளங்கி செயற்பட வேண்டும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா, கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எல்.ஏ. அமீர். எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 

1 comment:

  1. முஸ்லீம் உடன்பிறப்புகளுக்கு குரல் கொடுக்கும் ஹக்கீம் நல்ல மனிதர் மட்டுமில்லை தலைவர் அஷ்ரப் செய்த மீதிப்பணியை செய்யத்துடிக்கும் சிறந்த தலைவர் ஹக்கீம் அதைப்பொறுக்காமல் சிங்களவன் காலடியில் கிடக்கும் அதா வள்ளா உனக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் காத்திரு

    ReplyDelete