Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, September 17, 2012

ஜனாதிபதி மஹிந்தவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று அதிகாலை தீக்குளித்துள்ளார்.

சேலம் நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முச்சக்கர வண்டி நிலையத்துக்க
ு சென்றுள்ளார். அப்போது அவர் தமது வண்டியில் வைத்திருந்த பெற்றோல் பாட்டிலை எடுத்தார்.

அதன் பின்னர் "இந்தியாவுக்கு ராஜபக்ஷ வருவதைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி தமது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் 80 வீதத்திற்கும் அதிகமாக தீக்காயம் இருப்பதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாம் தீக்குளித்தது குறித்து விஜயராஜ் கூறுகையில், ராஜபக்ஷ இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியிறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்றார்.

விஜயராஜ் தீக்குளித்தது குறித்து முச்சக்கரவிண்டி சாரதிகர்கள் கூறுகையில், இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார்.

விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார். ஆனால் பதில் ஏதும் கூற வில்லை. சுமார் 5மணி அளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்ஷவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார் என்றனர் அவர்கள்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment