Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, September 16, 2012

அஷ்ரஃப் எனும் ஆலவிருட்சம் காத்தநகர் முகைதீன்சாலி

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நினைவாக

இதயத்தில் இறங்கி
சமூகத்தின்
தன்மானம் காத்த
தலைவர்கள் என்றும்
மரணிப்பதில்லை.

சரித்திரத்தை
துவக்கி வைத்த
சாணக்கிய தலைவனுக்கு
இதயத்தால் வரையப்படும்
இரத்த மொழியிது.

விதையாய் பிறப்பெடுத்து
விருட்சமாய் வளர்ந்து
காய் கனி பூவும் தந்து
உறுதியாய் வேரிருக்க
கிளைமட்டும் களையப்பட்ட
தாணைத் தளபதிக்கு.

அரசியல் நிர்வாணிகளாய்
அவதிப்பட்ட எங்களுக்கு
உரிமை எனும்
ஆடைகொடுத்தவன் நீ

அடக்குமுறைக்குள்ளான
அடிமை எங்களுக்கு
விடுதலை கொடுத்தவன் நீ.

இருட்டுத் தெருக்களில்
குருட்டுக் கண்களுடன்
அரசியல் விமோசனம்
தேடியலைந்த போது
கிழக்கு சூரியனாய்
வெளிச்சம் தந்தவன் நீ.

பேரின இரைச்சலில்
புதையுண்ட எங்கள்
உரிமைக் குரலை
உலகிற்கு வெளிக்காட்ட
உயிர் துறக்கவும்
துணிந்தவன் நீ.

உரிமை வயல்கள்
தலைமைப் பயிரின்றி
காய்ந்து வரண்டு
வெடிப்புற்ற வேளையில்
சமவுரிமை பயிரிட்டு
நீர் வார்த்தவன் நீ

வடகிழக்கு வானம்
இருள் சூழ்ந்த நேரம்
தேசம் முழுவதற்கும்
நட்சத்திரங்களுடன்
நிலவாய்
பிறப்பெடுத்தவன் நீ

இலங்கை தேசத்தின்
இனவாத இருளகற்ற
இறைவன் தந்த
உண்மை தலைவன் நீ

நாளை உன்
கனவுகளும்
கொள்கைகளும்
நீ விதைத்த
விதைகளிலிருந்து
விருட்சமாக
பிறப்பெடுக்கும்.

மறுக்கப்பட்ட
உரிமை கேட்டு
மரிக்கும்வரை
நீதிக்காய்
போராடியவனே
நீ மரித்தாலும்
மறையவில்லை
எம் இதயங்களே
இருப்பிடமுனக்கு.

இதயத்தில் இறங்கி
சமூகத்தின்
தன்மானம் காத்த
தலைவர்கள் என்றும்
மரணிப்பதில்லை.

No comments:

Post a Comment