என்னால் கடந்த காலங்களில் சமூகத்திற்காக செய்யப்பட்ட சேவைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது கவலையளிப்பதாகவும் முதன்முதலாக மாகாண சபைக்கு போட்டியிட்ட பொறியியலாளர் ஷிப்லிக்கு கொடுத்த வாக்குகளைக்கூட எனக்குத் தரவில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ எல்.எம்.என் முபீன் தெரிவித்தார்.
நேற்று காத்தான்குடி குலபாஉர்
நேற்று காத்தான்குடி குலபாஉர்
ராஷிதீன் பள்ளிவாயலில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் வைபவத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபையில் நாடு நகர சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்து வாதப்பிரதிவாதங்கள் செய்து தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தேன் மாகாணத்திலுள்ள பல காணிப்பிணக்குகளை அல்லாஹ்வின் உதவியால் சீர் செய்துள்ளேன் எமது சமூகத்தின் நன்மை கருதி பல வாழ்வாதார உதவிகளை செய்து கொடுத்துள்ளேன் வீதிகள் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு சிபாரிசு செய்து என்னால் முடிந்த வகையில் நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்து சேவை செய்துள்ளேன்
முஸ்லிம் காங்கிரஸிற்கு இம்முறை வாக்குவங்கி அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது எமது பகுதியில் போட்டியிட்ட பொது ஜன ஐக்கிய முன்னனி மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வாக்கு வங்கிகளில் முன்னரை விட சரிவேற்பட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தேர்தலில் நின்றிருந்தால் எனது தோல்வியை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் சமூகத்திற்காக தொடர்ந்து சேவை செய்வேன் என்பதையும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை குறைத்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குலபாஉர்ராஷிதீன் பள்ளிவாயலின் தலைவர் ஏ எல் பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் எம் அறபாத் மற்றும் பள்ளிவாயல் நிறுவாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment