10,000 ரூபா லஞ்சம் பெற்ற சிரேஸ்ட வன இலாக்கா உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொம்பகஹவெல - நீலபெத்த பிரதேசத்தில் அரச காணியில் விவசாயம் செய்த விவசாயிக்கு அது குறித்து எடுத்துகூறி சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கவென குறித்த விவசாயியிடம் இருந்து வன இலாக்கா உதவி அதிகாரி 10,000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளார்.
தொம்பகஹவெல நகர் ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்ட வேளை, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:
Post a Comment