தேசிய மின்சாரத்தை யாழ்.குடாநாட்டிற்கு வழங்கும் திட்டம் கிளிநொச்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் 3200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் யாழ்.குடாநாட்டுக்கு 132 கிலோவோட் தேசிய மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.
இம்மின்சாரம் 238 மின்கம்பங்கள் மூலம் வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகின்றது.
ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரும் மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளும், வடக்கு மாகாண அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment