யதார்த்தமான வாழ்க்கை முறையினை கைவிட்டு செயற்கைத்தகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறியமையே இன்றைய இறுக்கமான சூழ்நிலைக்கு காரணம்” என இன்று இடம் பெற்ற உலக உளநல தின நிகழ்வில் ஆரம்ப உரையினை ஆற்றிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநல சேவை மையத்தின்
உளவளத்துணையாளர் ஏ.மனூஸ் கூறிப்பிட்டார். இத்தினம் இன்று வெகு விமர்சையாக வைத்தியசாலை முன்றலில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் டாக்டர் தாஸிம் மற்றும் அதிதியாக வைத்தியசாலையின் உளநல சேவை மையத்தின் உளநோய் வைத்திய நிபுணர் டாக்டர் நௌபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு உலக உளநல தினத்தின் தொனிப்பொருளாக “மனச்சோர்வு – ஓர் உலகளாவிய நெருக்கடி அமைந்திருக்கின்றது.
மனச்சோர்வு என்பது தனிநபர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் சுற்றத்தாரையும் பாதிக்கின்ற ஒரு பரவலான நோய் நிலைமை என்பதைத் தெரிவிப்பதனையும் அது சிகிச்சையளிக்கக் கூடியதோர் நோய் நிலைமைதான் என்பதனைத் தெரிவிப்பதோடு அது சிகிச்சை அளிக்க முடியுமான நோய் நிலைமைதான் என்பதனை வழியுறுத்தும் முகமாக மக்களக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனச்சோர்வானது உலகநோய்ப் பழுவிற்கான காரணிகளின் நிரல்படுத்தலில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருக்கின்றது. இது காலப்போக்கில் முதல் இடத்தினைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தினத்தில் மனநலத்தினைப் பாதிக்கின்ற வண்ணாத்துப்பூச்சி சின்னத்தினை அடையாளமாக அணிவித்து மனநலம் தொடர்பான கருத்துப் பரிமாறல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவிருக்கிறோம்.
இத்தினத்தினை முன்னிட்டு அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை உள நல சேவை மையம் (விருட்சம்) வைத்தியசாலை முன்றலில் கொண்டட்ட நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு பல நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளது எனவும் உளநோய் வைத்திய நிபுணர் டாக்டர் நௌபல் தெரிவித்தார்.
.jpg)
No comments:
Post a Comment