Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

அரச தாதி உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்தமும் ஆர்பாட்டமும்

அரச தாதி உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 23 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய தேவைகளை நிறைவேற்றுமாறு கோரி இன்று (10) இலங்கையிலுள்ள சகல வைத்தியசாலைகள் முன்பாகவும் தாதி உத்தியோகஸ்தர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

கல்முனை பிரதேசத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றும் தாதி உத்தி
யோகஸ்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

” அரசே தாதியர்கள் கொரிக்கைகளை நிறைவேற்றுங்கள், மேலதிக நேரக் கொடுப்பனவை கொடுங்கள், தாதியர்களுக்கான புதிய சட்ட யாப்பை அமுல்படுத்துங்கள், வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக அங்கீகரியுங்கள், இடர் கொடுப்பனவு மற்றும் உபகரண கொடுப்பனவுகளை அதிகரித்துக் கோடு, பட்டதாரி தாதியர்களை அரச சேவையில் உடன் இணைத்துக் கொள் என்பன போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.






No comments:

Post a Comment