Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

தலிபான்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த 14 வயதான சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும்
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு
தெரியப்படுத்தி வந்தார்.

அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார்.

அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தனது சொந்த இடமான மின்கோராவிலிருந்து பெஸாராவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்.

ஆரம்பத்தில் அவரது நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவரது தலையில் இருந்த குண்டும் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment