Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

ஹஜ் கடமைக்காக அனுமதியின்றி புனித நகருக்குள் நுழைந்த 20,000 யாத்திரிகர் தடுத்துவைப்பு

ஹஜ் கடமைக்கான அனுமதி பெறாமல் புனித நகருக்குள் செல்ல முற்பட்ட மொத்தம் 20,534 யாத்திரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹஜ் கடமைக்கான கடவுச் சீட்டு திணைக்களத்தின் தலைவர் பிரிகேடியர் அயத் அல் ஷார்பி தெரிவித்துள்ளார்.


புனித நகருக்கு செல்லும் பல்வேறு சோதனைச் சாவடிகள் மூலமே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் தடுத்து நிறுத்தப்பட்ட 20,534 பேருள் 1,600க்கும் மேற்பட்டோர் இஹ்ராம் ஆடை (ஹஜ் அல்லது உம்ரா வுக்கு அணிய வேண்டிய ஆடை) இன்றி புனித நகருக் குள் நுழைய முற்பட்டவர்கள் என்றும் 20 பேர் போலி யான ஆவணங்களை கொண்டுவந்தவர்கள் என்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று ஒருவர் பெண்ணாக மாறுவேடம் இட்டு புனித நகருக்குள் நுழைய முற்பட்டதாகவும் பிரிகேடியர் ஹார்பி கூறினார். இதில் 75 சவூதி மற்றும் வெளிநாட்டு ஓட்டுநர்கள் முறையான ஆவணமில்லாதோரை புனித நகருக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட போது பிடிபட்டதாக அவர் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது காலம் முடிந்தும் சவூதியில் தங்கியிருந்த 281 பேர் போலி அகாமா (குடியிருப்பு அனுமதி) வைத்திருந்த 43 பேர், சவூதியின் குடியிருப்பு மற்றும் தொழில் விதிகளை மீறி நாட்டுக்குள் ஊடுருவிய 200 பேர் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஹஜ் கடமைக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் இஹ்ராம் ஆடையின்றி வேறு ஆடைகளை அணிந்து வந்த சவூதி மற்றும் வெளிநாட்டினரைக் கொண்ட 8 பஸ்கள் புனித நகருக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ்களின் வெளிநாட்டு ஓட்டுநர்கள் நாடு கடத்தப்படுவதற்காக குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சட்ட விரோதமான முறையில் ஹஜ் யாத்திரைக்கு அழைத்துவரப்படும் சவூதி நாட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இம்முறை ஹஜ் கடமைக்கு மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான நிலப்பரப்பின் மூலம் மக்காவுக்குள் ஆட்களைக் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திப்பதாகக் கூறப்படுகிறது. ஹஜ்ஜுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் இவ்வாறான ஆட் கடத்தல்காரர்களூடாக ஹஜ் கடமைக்கு செல்வோர் அதிகரித்திருப்பதாக சவூதியில் இருந்த வெளியாகும் ‘சவூதி கஸட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை ஹஜ் கடமைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சவூதிஅரசு மேற்கொண்டுள்ளது. ஹஜ் கடமையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதில் 20 இலட்சம் பேர் வெளிநாட்டினராவர். 1,400க்கும் மேற்பட்ட முஸ்லிம் தலைவர்களும் ஹஜ் கடமையில் ஈடுபடுவதாக சவூதி அரசு அறிவித்துள்ளது.

இதில் ஹஜ் கடமைக்கு வந்த மியன்மார் மற்றும் இந்திய யாத்திரிகர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment