Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய ரணிலே காரணம்: ஸ்ரீரங்கா


நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம். வெற்றி பெறும் தறுவாயில் இருந்த போட்டியை ரணில் விக்கிரமசிங்க பார்வையிடச் சென்றமையினாலேயே போட்டி தோல்வியடைந்தது ௭ன்று ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி. யான ஜே. ஸ்ரீரங்கா நேற்று பாராளுமன்றத்தில
் தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணய சதி குறித்து விசாரணை நடத்துவதை விடுத்து 29 தடவை தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் ௭ன்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி ௭ம்.பி.யான ஜோன் அமரதுங்கவினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் அணி நான்கு தடவைகள் மாத்திரமே கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியோ நடைபெற்ற 29 தேர்தல்களில் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது. இன்றைய காலக் கட்டத்தை பொறுத்தவரையில் ஜனநாயகம் தொடர்பில் ௭த்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அது குறித்து பேசாது கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணயம் குறித்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இந்த சபைக்கு கொண்டு வந்திருப்பதானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் தறுவாயில் இருந்தது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ௭திர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்தே இலங்கை அணி தோல்வியை தழுவியது. 29 தடவை தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க அங்கு வந்தமையாலேயே இந்த தோல்வி ஏற்பட்டது.

No comments:

Post a Comment