தாய்லாந்து - பேங்கொக்கில் இருந்து இலங்கைக்கு ஆபரணங்கள் மற்றும் இரத்தினக்கல் என்பவற்றை கடத்திவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (24) அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து மொத்தம் 5500 கிராம் நிறையுடைய பல வர்க்க ஆபரணங்கள் மற்றும் மொத்தம் 379 கிராம் நிறையுடைய இரத்தினக்கல் போன்ற கல்லும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்காமல் குறித்த நபர் இப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment