பஹ்ரேனில் அந்நாட்டு மன்னருக்கெதிராக டுவிட்டரில் கருத்து வெளியிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் 20 வயதானவர்கள் எனவும் கடந்த புதன்கிழமையன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பஹ்ரேன் நாட்டின் மனித உரிமைகளுக்கான இளைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னர் ஹமாட் மற்றும் ஆளும் அல் கலீபா குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர்களின் கணனி உட்பட பல இலத்திரனியல் சாதனங்களும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் ஒருவாரத்துக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன ் அடுத்த வாரம் இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பஹ்ரேனில் அந்நாட்டு மன்னரின் புகைப்படத்தினைக் கிழித்தார் எனக்கூறி சமூக ஆர்வலர் ஒருவரின் மகளுக்கு 2 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றமொன்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
அங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'சிட்டே' பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மன்னருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், 'சுனி' ஆட்சியாளர்கள் அடக்கப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கன.
குறித்த நால்வரும் 20 வயதானவர்கள் எனவும் கடந்த புதன்கிழமையன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பஹ்ரேன் நாட்டின் மனித உரிமைகளுக்கான இளைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னர் ஹமாட் மற்றும் ஆளும் அல் கலீபா குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவர்கள் டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர்களின் கணனி உட்பட பல இலத்திரனியல் சாதனங்களும் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் ஒருவாரத்துக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன
பஹ்ரேனில் அந்நாட்டு மன்னரின் புகைப்படத்தினைக் கிழித்தார் எனக்கூறி சமூக ஆர்வலர் ஒருவரின் மகளுக்கு 2 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றமொன்று கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
அங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'சிட்டே' பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மன்னருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், 'சுனி' ஆட்சியாளர்கள் அடக்கப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கன.

No comments:
Post a Comment